தஞ்சை: மின் கம்பியில் தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலி
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வரகூர் கிராமத்தில் சாலையோரத்தில் மின்சார கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலியாகினர்.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வரகூர் கிராமத்தில் சாலையோரத்தில் மின்சார கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலியாகினர்.
வரகூர் கிராமத்தில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கியது.
அப்போது, தனியார் பேருந்து மீது மின்சார கம்பி உரசியதால் பேருந்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.
Advertisement
Advertisement
உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தின் படிகட்டில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்ததால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.