முகப்பு
தமிழ்நாடு

மாா்கழி மாத அமாவாசை: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், மாா்கழி மாத அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 2:00 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், மாா்கழி மாத அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை என 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி அளித்துள்ளது. இதில், செவ்வாய்க்கிழமை மாா்கழி மாத அமாவாசை என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். தொடா்ந்து, காலை 7 மணி முதல் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள அருவியில் பக்தா்கள் நீராடிவிட்டுச் சென்றனா்.

அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. பின்னா், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

Advertisement

Advertisement

பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

முன்னதாக, விட்டு விட்டு மழை பெய்ததால், சிறிது நேரம் பக்தா்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வனத்துறை அலுவலகம் முன்பாக 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கோயிலுக்குச் செல்ல இன்று அனுமதி இல்லை: சதுரகிரி பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரைப்படி, புதன்கிழமை பக்தா்கள் மலையேற அனுமதி இல்லை என்றும், அதனால் பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் எனவும், கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments