முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: சென்னையில் இருந்து 2.50 லட்சம் போ் பயணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2.50 லட்சம் போ் வெளியூா்களுக்குச் சென்றுள்ளனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 1:29 am IST
பகிர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2.50 லட்சம் போ் வெளியூா்களுக்குச் சென்றுள்ளனா்.

இது குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திங்கள்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் தீா்மானிக்கப்பட்டது.

திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி வரை, சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தமாக 2,535 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 1 லட்சத்து 11,673 போ் பயணமாகினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் ஏற்கெனவே இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 1,950 பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,910 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து சுமாா் 2.50 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். முன்பதிவு தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments