சேலம்: வாழப்பாடியில் திருவள்ளுவர் தின விழா
வாழப்பாடி இலக்கியப்பேரவை சார்பில், திருவள்ளுவர் தின விழா, கவிதை நூல்கள் வெளியீட்டு விழா, பேரவை வெள்ளிவிழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப்பேரவை சார்பில், திருவள்ளுவர் தின விழா, கவிதை நூல்கள் வெளியீட்டு விழா, பேரவை வெள்ளிவிழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் இலக்கிய பேரவை சார்பில், 25 ஆண்டுகளாக திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இலக்கியப் பேரவை வெள்ளி விழா, திருவள்ளுவர் தின விழா மற்றும் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, பேரவை தலைவர் அ.செந்தில்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் மா.கணேசன் தலைமை வகித்தார்.
Advertisement
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்ஜிஆர்.பழனிசாமி, ஊர் கவுண்டர் மூர்த்தி, ஆடிட்டர் குப்பமுத்து, டி.ஆர்.எஸ். தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலக்கிய பேரவை செயலர் சிவ. எம்கோ எழுதிய 'எம்கோவின் கவிதைகள்'' நூல் மற்றும் இணை செயலர் பெ.பெரியார் மன்னன் எழுதிய 'பேசும் மௌனங்கள்' கவிதை நூல் மற்றும் 'ஊஞ்சல்' சிறார் பாடல் நூல்களை, அரிமா சங்க பட்டயத்தலைவர் எம்.சந்திரசேகரன் வெளியிட, நல்லாசிரியர் கோ.முருகேசன் தொழிலதிபர் கே. பி. சண்முகம், அரிமா சங்க தலைவர் ஜவஹர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூலாசிரியர்கள் சிவ.எம்கோ, பெரியார்மன்னன் ஆகியோர் ஏற்புரை வழங்கினார். திருக்குறள் ஒப்புவித்த மாணவ-மாணவியருக்கு சோமம்பட்டி சிவா பரிசு தொகை வழங்கினார். நிறைவாக, இலக்கிய பேரவை பொருளாளர் ஆசிரியர் ஸ்ரீமுனிரத்தினம் நன்றி கூறினார்.
முன்னதாக, வாழப்பாடி ராஜன் அச்சகத்திலிருந்து, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருவள்ளுவர் சிலை வரை, மாணவ-மாணவியரின் பாரம்பரிய சிலம்பாட்டம், மங்கள இசையோடு, திருவள்ளுவர் முகமூடி அணிந்தபடி ஊர்வலமாக சென்ற தமிழ் ஆர்வலர்கள் ,திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.