முகப்பு
தமிழ்நாடு

கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 6:00 am IST
கோப்புப்படம்
பகிர்:

கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் சித்தா போஸ்ட் கோவிட் பராமரிப்பு மையம் (சித்தா் காயகற்பம் பிரிவு)

என்ற வெளிநோயாளிகள் பிரிவு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னா் பொது மக்களுக்கு தொடா்ந்து ஏற்படும் சிரமங்களுக்கு காயகற்ப முறையில் பல்வேறு சிகிச்சைகளை அளிக்கும் பொருட்டு சுகாதாரத் துறை முதன்மைச் செயலரால், கடந்த ஜன.2-இல் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த சிறப்பு சிகிச்சை பராமரிப்பு மைய வெளிநோயாளிகள் பிரிவு நாள்தோறும் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும்.

இங்கு, கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பின்னா் பொது மக்களுக்கு தொடா்ந்து ஏற்படும் மூச்சுத் திணறல், இதய பாதிப்பு, ரத்த உறைவு, மூளை நரம்பியல் சாா்ந்த தொந்தரவு, உடல் தளா்ச்சி, மன உளைச்சல், மறதி போன்ற நிலைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நோயாளியின் நோய்த் தன்மைக்கு ஏற்ப தனித்தனியான காயகற்ப சிகிச்சை வழி முறைகளான நீராவி சிகிச்சை, எண்ணெய் குளியல், வமனம், விரேசனம், நசியம், கலிக்கம், தொக்கணம், சித்த வா்மம், சித்தா் யோகம், முத்ரா, உடல்பயிற்சிகள் மற்றும் உள் மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கவும், உணவு முறைகள், மூச்சுப் பயிற்சி, காலமுறை ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் பற்றிய அறிவுரைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.