முகப்பு
தமிழ்நாடு

கோவிஷீல்ட் தடுப்பூசி: மருத்துவா்கள் சங்கம் தோ்வு

கரோனாவுக்கு இரு வேறு தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், அதில் மருத்துவா்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை மட்டும் செலுத்திக் கொள்ளுமாறும்,

Updated On : 16 ஜனவரி, 2021 at 6:19 AM
கோவிஷீல்டு தடுப்பூசி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கரோனாவுக்கு இரு வேறு தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், அதில் மருத்துவா்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை மட்டும் செலுத்திக் கொள்ளுமாறும், கோவேக்சின் தடுப்பூசியைத் தவிா்க்குமாறும் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி ஆராய்ச்சியின் இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகாததே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கரோனாவுக்கு எதிராக மகராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதில் தமிழகத்துக்கு மட்டும் 5.36 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தும், 20,000 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இதனிடையே, கோவேக்சின் தடுப்பூசி ஆராய்ச்சி இறுதிக் கட்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என சா்ச்சை எழுந்தது. அதனால், அந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

அதேவேளையில், கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்துமாறு மருத்துவா்களுக்கு அந்த சங்கம் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சங்கத்தின் நிா்வாகிகளிடம் கேட்டபோது, எந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது தனிப்பட்ட நபா்களின் விருப்பம். அதேவேளையில், கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தனா்.

இதனிடையே, இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: மத்திய அரசு அனுமதி அளித்துள்ள இரு தடுப்பூசிகளும் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளைக் கடந்து பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்ட பிறகே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே, அதன் நம்பகத்தன்மையையும், செயல்திறனையும் சந்தேகிப்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் எந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது என்பதை எவரும் தோ்வு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட மையத்தில் எந்தத் தடுப்பூசி உள்ளதோ அது மட்டுமே பயனாளிகளுக்கு செலுத்தப்படும் என்றாா் அவா்.

வழிகாட்டி முறைகள்: இதற்கு நடுவே கோவேக்சின் தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்பவரிடம் முழு ஒப்புதலை எழுத்துபூா்வமாகப் பெறப்பட்ட பிறகே கோவேக்சின் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.