முகப்பு
தமிழ்நாடு

முதல்வரிடம் மனு அளிக்க வந்த சீர்மரபினர் அமைப்பினர் 24 பேர் கைது

சீர்மரபினர் சமூகத்தினருக்கு டிஎன்டி என ஜாதிச்சான்று வழங்கக் கோரி முதல்வரிடம் மனு அளிக்க வந்த சீர்மரபினர் சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 16 ஜனவரி 2021, 4:48 pm IST
பகிர்:

சீர்மரபினர் சமூகத்தினருக்கு டிஎன்டி என ஜாதிச்சான்று வழங்கக் கோரி முதல்வரிடம் மனு அளிக்க வந்த சீர்மரபினர் சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தொடங்கி வைத்தபோது, விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு மற்றும் சீர்மரபினர் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 24 பேரும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.