முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் பி.எஸ்.ஞானதேசிகன் உருவப்படத்திற்கு அஞ்சலி

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மறைந்ததையடுத்து அவரது உருவப்படத்திற்கு சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 4:16 pm IST
சிதம்பரத்தில் மறைந்த தமாகா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நகர தமாகாவினர்
பகிர்:

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மறைந்ததையடுத்து அவரது உருவப்படத்திற்கு சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை அன்று  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமாகா மாநிலத் துணைத் தலைவர் வழக்குரைஞர் பி.எஸ். ஞானதேசிகன் சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில் சிதம்பரம் மேலவீதி உள்ள நகர தமாகா அலுவலகம் முன்பு மறைந்த த.மா.கா மாநில மூத்த துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் உருவப்படத்திற்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தில்லை.ஆர்.மக்கின் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என். ராதா,  மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜா. சம்பத்குமார், பாபு சந்திரசேகர்.மாவட்ட தொண்டர் அணி தலைவர் தில்லை கோ. குமார், நகரத் துணைத் தலைவர் ஆர் சம்பந்தமூர்த்தி, ஆர்.வி.சின்ராஜ், என். இளங்கோவன், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் தில்லை வி .குணா, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் எம்.ஜி.ராஜராஜன், நகரப் பொருளாளர் சம்பந்தம் பேன்சி எஸ். எஸ். நடராஜன், நகர பொதுச் செயலாளர்கள் ஆட்டோ டி. குமார், டி. பட்டாபிராமன், மாவட்டச் செயலாளர் பாலசுந்தர், மாவட்ட செயலாளர் பி. குமார் இன்பரசு, நகர செயலாளர் கீரை துரை .முருகன், மாநில மருத்துவ பிரிவு மண்டல செயலாளர் ஆர். வீரவேல், மாவட்ட மகளிரணி தலைவர் கே ராஜலட்சுமி மாவட்டச் செயலாளர்கள் கே. தில்லை செல்வி, ஆர். சுப்புலட்சுமி,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கோ. ஜனகம் மீனா செல்வம்  இளைஞரணி செயலாளர் ராதா மாலா நகரச் செயலாளர் ருக்குமணி கஜேந்திரன் ராதாகிருஷ்ணன், மணி ரூபன் ஆனந்த் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.