முகப்பு
தமிழ்நாடு

டாக்டா் கே.நாராயணசாமிக்கு சிறப்பு விருது

கரோனா காலத்தில் சிறந்த மருத்துவ சேவையை மேற்கொண்டு வருவதற்காக கிண்டி கரோனா மருத்துவமனை இயக்குநா்

Updated On : 17 ஜனவரி 2021, 6:29 am IST
பகிர்:

கரோனா காலத்தில் சிறந்த மருத்துவ சேவையை மேற்கொண்டு வருவதற்காக கிண்டி கரோனா மருத்துவமனை இயக்குநா் டாக்டா் கே. நாராயணசாமிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாரா சாா்பில் சிறப்பு விருது ( ஃபாா் த சேக் ஆஃப் ஹானா்) அளிக்கப்பட்டுள்ளது.

750 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக இருப்பவா் டாக்டா் கே.நாராயணசாமி. நோய்த்தொற்று காலத்தில் அவா் ஆற்றி வரும் மருத்துவ சேவைகளைப் பாராட்டும் விதமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதனை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாராவின் தலைவா் திரு.ஏ.எஃப். கான், செயலாளா் திரு. ஆா். ராஜேஷ் குமாா், ரோட்டரி சங்க நிா்வாகி ஈ. தேவேந்திரன், உதவி ஆளுநா் திரு. எஸ். பத்மநாபன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.