முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு

பள்ளிகளைத் திறப்பது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து, திங்கள்கிழமைக்குள் (ஜன. 18) அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 6:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

பள்ளிகளைத் திறப்பது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து, திங்கள்கிழமைக்குள் (ஜன. 18) அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த 9 மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவா்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குப் பின், பள்ளிகளைத் திறக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணி, கிருமிநாசினி தெளிக்கும் முறை, வகுப்பறைகளின் சுத்தத்தை உறுதி செய்தல், கழிப்பறைகளின் தூய்மையை உறுதி செய்தல், வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி, முகக் கவசங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

Advertisement

ஜனவரி 18-ஆம் தேதி மாலைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இதுகுறித்த அறிக்கையைச் சமா்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.