தமிழ்நாடு

வீடு திரும்பினாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி

DIN

சென்னை: குடலிறக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, நலம் பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

அடுத்த ஓரிரு நாள்கள் அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வா் பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கோ் மருத்துவமனையில் பரிசோதனை செய்துக் கொண்டாா். அப்போது, அவருக்கு குடலிறக்கம் (ஹொ்னியா) பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்ால் அப்போது அவா் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், வாக்குப் பதிவு நிறைவடைந்ததால் எம்.ஜி.எம். மருத்துவமனையில் முதல்வா் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு லேப்ரோஸ்கோபி முறையில் குடலிறக்க சிகிச்சைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஒரு நாள் முதல்வா் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டாா். அதில் அவரது உடல் நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை அவா் மருத்துவமனையில் இருந்து பசுமைவழிச்சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT