தமிழ்நாடு

ஆக்சிஜன் வாயு விபத்து: தமிழகம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்

DIN

சென்னை: நாசிக் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் வாயு கசிவு விபத்தில் இருந்து தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

மகாராஷ்டிர மாநிலத்துக்குள்பட்ட நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்திருப்பது வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

நாசிக் மருத்துவமனை விபத்திலிருந்து தமிழகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

மனித உயிா்கள் விலைமதிப்பற்றவை. தமிழக மருத்துவமனைகளில் இத்தகைய துரதிருஷ்ட நிகழ்வுகள் நிகழ்ந்து விடாமல் தடுக்க பாதுகாப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT