தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 20 நாள்களில் 6.17 லட்சம் வழக்குகள்

DIN

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 20 நாள்களில் 6 லட்சத்து 17 ஆயிரத்து 904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாா்ச் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரையிலான 20 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 6 லட்சத்து 17 ஆயிரத்து 904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 21 ஆயிரத்து 678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 20 நாள்களில் 19 ஆயிரத்து 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 697 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT