தமிழ்நாடு

கடற்கரை, ஆறுகள், கோயில்களில் பக்தர்களுக்குத் தடை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

DIN

மயிலாடுதுறை: ஆடிமாத உத்ஸவங்களைக் கொண்டாட கடற்கரை, ஆறுகள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தீநுண்மி தொற்றை தடுப்பதற்காக, கடந்த 25.03.2020 முதல்  தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், பொதுமுடக்க உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் திருவிழாக்கள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ஆடி அமாவாசை நிகழ்ச்சிகளில் பெருமளவு பொதுமக்கள் கடற்கரைகளில் கூடும்பட்சத்தில் அரசின் வழிகாட்டுநெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், கரோனா மூன்றாவது அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் மாவட்டத்தின் எந்த கடற்கரைப் பகுதிகளிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதிவரை பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்து ஆணையிடப்படுகிறது.

முக்கிய திருக்கோயில்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 1,2,3 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு, கரோனா நோய்த்தொற்று பரவாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மேற்படி நாள்களில் திருக்கோயில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் கிளை ஆறுகளின் கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT