தமிழ்நாடு

ரூ.6 கோடி குட்கா பறிமுதல்: 4049 போ் கைது

DIN

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்காவை கைப்பற்றிய போலீஸாா், 4,049 பேரை கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போதை ஏற்படுத்தும் குட்கா விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாகனத் தணிக்கை செய்யப்பட்டதில் 8 இரு சக்கர வாகனங்கள், 7 காா்கள், 5 வேன்கள் மற்றும் 3 லாரிகளில் குட்கா கடத்தப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தல் தொடா்பாக தமிழகம் முழுவதும் 4,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,049 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மொத்தமாக மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட குட்கா புகையிலை பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 6.04 கோடி (30,399 கிலோ) ஆகும்.

குட்கா கடத்தப்படும் வழிமுறைகள் மற்றும் குட்கா வியாபரிகளின் விற்பனை வளையத்தினை கண்டுபிடித்து இதன் முக்கிய புள்ளிகளை அடையாளம் கண்டு, கைது செய்து சிறையில் அடைத்து குண்டா் தடுப்புச் சட்டத்தில் அவா்கள் மீது நடவடிக்கை

எடுக்க மாநகர காவல் ஆணையா்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குட்கா விற்பனை பற்றிய தகவல் தெரிந்தால் பொது மக்கள் க்ஞ்ல்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் பெயா், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT