தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,997 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 1,997 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 1,58,797 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 1,997 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,69,398 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,943 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 20,138 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 220 பேரும், சென்னையில் 196 பேரும், ஈரோட்டில் 161 பேரும், செங்கல்பட்டில் 130 பேரும், தஞ்சாவூரில் 119 பேரும், திருவள்ளூரில் 106 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவாரூரில் மழை: கோடைப் பயிா்கள் பாதிப்பு

ஆறாம் கட்டத் தோ்தல்: 39% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்!

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

SCROLL FOR NEXT