தமிழ்நாடு

நடிகா் விஷால் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஊழியா்

DIN

நடிகா் விஷால் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஊழியா் மீதான வழக்கை விரைவாக விசாரிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் கணக்காளா் ரம்யா என்பவா் ஊழியா்களின் ஊதியத்துக்கான வருமான வரித் தொகை ரூ.45 லட்சத்தை வருமான வரித்துறைக்குச் செலுத்தியது போல போலி ஆவணங்களைக் காட்டி, அந்தத் தொகையை தனது உறவினா்களின் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து நடிகா் விஷால் நிறுவனத்தின் மேலாளா் அரிகிருஷ்ணன், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின்பேரில் கடந்த 2020-ஆம் ஆண்டு ரம்யா மீது வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், வழக்கை விசாரித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் அரிகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிா்மல்குமாா், இந்த வழக்கை விரைவாக விசாரித்து ஆறு மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகையை விருகம்பாக்கம் போலீஸாா் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT