தமிழ்நாடு

கூடலூரில் மின்வாரிய அலுவலர் கொலை: மனைவி, மகன் கைது

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் மின்கம்பி ஆய்வாளர் இறந்த வழக்கில் அவரது மகன் மற்றும் மனைவியை கூடலூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கூடலூர், 15 ஆவது  வார்டு, கன்னிகாளிபுரம், வேப்பமர தெருவில் வசிப்பவர் சின்ன கருப்பையா (50). இவர் வண்ணாத்தி பாறை துணை மின் நிலையத்தில் மின்கம்பி ஆய்வாளராக வேலைபார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி விஜயா (45) என்ற மனைவியும், விஜய் (21) ஆகிய மகனும் உள்ளனர். மற்ற இரண்டு மகன்கள் தேவதானப்பட்டியில் வசித்து வருகிறார்கள்.

மின்கம்பி ஆய்வாளர் சின்ன கருப்பையாவிற்கு தனது மனைவி விஜயா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சின்ன கருப்பையா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது மகன் விஜய் வீட்டில் இருந்துள்ளார். மதுபோதையில் மனைவியை அவதூறாக பேசியுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை மகனுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது விஜய் தனது தாயார் விஜயாவை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த விஜய் தனது தந்தை சின்னக்கருப்பையாவின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் சின்னக்கருப்பையா மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளார்.

உடனே விஜயா மற்றும் மகன் விஜய் ஆகிய இருவரும் சின்ன கருப்பையாவை அவரது சொந்த ஊரான தேவதானப்பட்டிக்கு கொண்டுச் சென்று அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அப்போது இறுதிச்சடங்கில் சின்ன கருப்பையாவின் உடலை குளிப்பாட்டும்போது கழுத்தில் காயம் இருந்ததை பார்த்த உறவினர்கள் தேவதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன்பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல் ஆய்வாளர் கே முத்துமணி, சார்பு ஆய்வாளர் பொறுப்பு கணேசன் ஆகியோர் விசாரணை செய்து மகன் விஜய், மனைவி விஜயா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT