முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் வரும் முன்பாக காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி

துணை நிலை ஆளுநர் காரைக்கால் வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக ஆட்சியரகம் அருகே ஓட்டுநர் உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 20 பிப்ரவரி 2021, 12:56 pm IST
காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி
பகிர்:

காரைக்கால் : துணை நிலை ஆளுநர் காரைக்கால் வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக ஆட்சியரகம் அருகே ஓட்டுநர் உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக தமிழிசை சௌந்தரராஜன் சனிக்கிழமை காரைக்கால் வந்தார்.

இவரது வருகைக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக காரைக்கால் நகராட்சி வார்டு பகுதிகளில்,  குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் வாகனம் ஒன்று ஆட்சியரகம் நோக்கி வந்தது. அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர், வாகனத்தில் அழைத்துவந்த தமது இரண்டு குழந்தைகளுடன் ஆட்சியரகம் நோக்கி சென்றார். திடீரென தாம் வைத்திருந்த மண்ணெண்ணையை தமது உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

Advertisement

Advertisement

ஆளுநரை வரவேற்கும் விதத்தில் பணியிலிருந்த போலீஸார் விரைந்து சென்று அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அவர் வசமிருந்த இரண்டு குழந்தைகளையும் அப்புறப்படுத்தினர்.

தமக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் தரவில்லை எனவும், நிறுவனத்தினர் அலட்சியமே காரணம் எனவும், இதனால் குடும்பம் நடத்த முடியாமல் தவிப்பதாகவும், நிறுவனத்தினர் உரிய முறையில் பதில் தருவதில்லை, இப்பிரச்னைக்கு யாரும் தீர்வு காண முற்படுவதில்லை என கூறினார்.

விசாரணையில் அவர் பெயர் ஏசுராஜ் என்றும், நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தில், ஒப்பந்த முறையில் இயக்கப்படும் வாகனத்தின் ஓட்டுநர் என்றும் தெரியவந்தது. இவரை போலீஸார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.  பின்னர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். 

ஆளுநர் வரும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.