டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி..
டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025-26 கல்வியாண்டில் 10 அல்லது 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட திறமையான மாணவர்களுக்கு உதவும் வகையில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025 - 26ஆம் கல்வியாண்டில் 10 அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாக, மாற்றுத் திறனாளி மாணவர்களாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ஏற்ப, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை இந்த கல்வி உதவித் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும்.
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. ஜூன் 28ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Dr. Rajendra Prasad Scholarship! Who can apply?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.