ராஜமௌலியின் வாரணாசி! இதுதான் கதைக் கருவா?
இயக்குநர் ராஜமௌலியின் வாரணாசி படத்தின் கதைக் களம் குறித்து எழுத்தாளர் கூறியது குறித்து...
இயக்குநர் ராஜமௌலியின் வாரணாசி படத்தின் கதைக் களம் குறித்து எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர்கள் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடிக்கும் வாரணாசி திரைப்படம் உருவாகி வருகிறது.
ஆஸ்கர் விருதாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, எழுத்தாளரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
ரூ. 1,400 கோடி செலவில் உருவாகி வரும் இந்தப் படம், 2027 ஏப்ரல் 7 ஆம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு கலந்துரையாடலின்போது, படத்தின் கதைக் களம் குறித்து விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து வாரணாசி கதை உருவாக்கப்பட்டிருப்பதாக விஜயேந்திர பிரசாத் கூறினார்.
படத்தின் முன்னோட்ட விடியோவிலேயே ராமர், ஹனுமன், கும்பகர்ணன் ஆகிய பாத்திரங்கள் காட்டப்பட்டிருக்கும்.
Varanasi update: Writer Vijayendra Prasad hints at War between Rama and Kumbhakarna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.