FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரியங்கா சோப்ரா பிறந்த நாள்: வாரணாசி படக் காட்சிகளுடன் வாழ்த்திய ராஜமௌலி!

நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த நாளுக்கு இயக்குநர் ராஜமௌலி கூறியது பற்றி...

Updated On : 18 ஜூலை 2026, 3:22 pm IST
வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ரா. - படம்: எக்ஸ் / ராஜமௌலி.
பகிர்:

நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த நாளுக்கு வாரணாசி படத்தின் புதிய புகைப்படங்களுடன் இயக்குநர் ராஜமௌலி வாழ்த்து கூறியுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா மந்தாகினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

தற்போது, அவரது பிறந்த நாளை முன்னிட்டுஇயக்குநர் ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அவள் சிரிக்கும்போது அழகு. சிரிக்காதபோது நெருப்பு. மந்தாகினி - வாரணாசியில் பிரியங்கா சோப்ரா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் நடித்து வந்தார். பின்னர், ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Priyanka Chopra's Birthday: Rajamouli extends wishes with scenes from the movie 'Varanasi'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments