FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

என் பயோப்பிக்கில் நடிக்க பிரியங்கா சோப்ரா தகுதியானவர்..! சவிதா புனியா பேட்டி!

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீராங்கனை சவிதா புனியாவின் பேட்டி குறித்து...

29 வினாடிகள் முன்பு
சவிதா புனியா, பிரியங்கா சோப்ரா - படங்கள்: பிடிஐ, ஏபி
பகிர்:

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா பேட்டியில், “எனது பயோப்பிக்கில் நடிக்க பிரியங்கா சோப்ரா தகுதியானவர்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி மகளிரணி தங்கம் வெல்ல சவிதா புனியா மிக முக்கியமான பங்கை வகித்தார். 1974க்குப் பிறகு மகளிரணி தங்கம் வென்று வரலாறு படைத்தது.

இந்த அபார வெற்றியின் இந்திய ஹாக்கி மகளிரணி ஒலிம்பிக்ஸ் 2028ல் விளையாட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாக்கி அணியில் கோல் கீப்பராக சவிதா புனியா சிறப்பாக பங்காற்றினார்.

Advertisement

Advertisement

ஹரியாணாவைச் சேர்ந்த சவிதா புனியா (36 வயது) இந்தியாவின் தடுப்புச் சுவர் என ஹாக்கி ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 171 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இவரது கோல்கீப்பிங் செய்லபாடுகள் அனைவரையும் வியக்க வைத்தது.

சவிதா புனியாவின் தாயாருக்கு உடல்நலம் குன்றியதால் ஐந்தாம் வகுப்பு முதலே வீட்டு வேலைகளையும் படிப்பையும் விளையாட்டையும் பார்த்துக்கொள்வது மிகுந்த சிரமமான ஒன்றாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், பத்மஸ்ரீ விருதை வென்றுள்ள சவிதா புனியா பிடிஐ செய்தி நிறுவனதுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பேசியிருப்பதாவது:

என்னை வைத்து படம் எடுப்பார்கள் என எப்போதும் நினைத்தது இல்லை. ஆனால், அப்படி எடுத்தால் பிரியங்கா சோப்ரா எனக்கு விருப்பமானவர். அவர் என்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பார் என நினைக்கிறேன்.

பிரியங்காவின் பயணத்தைப் பார்க்கும் போது அது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. எனக்கு இசையைக் கேட்கப் பிடிக்கும். புத்தகம் படிப்பேன். தினமும் அனுமன் பாடல்களுடன் அன்றைய நாளைத் தொடங்குவேன்.

நான் அதிகமாக படங்களைப் பார்ப்பதில்லை. இதுவரை 8 அல்லது 9 படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். கடைசியாக தீபிகா படுகோன் நடித்த சப்பாக் படத்தைப் பார்த்தேன் என்றார்.

நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்கெனவே குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் படத்தில் 2014ல் நடித்துள்ளார்.

தற்போது, ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் தி ஃபிளப் என்ற ஆங்கிலப் படம் வெளியானது.

summary

Hockey icon Savita Punia wants Priyanka Chopra Jonas to play her in a biopic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments