FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சீன் திரைப்படத்திற்காகக் காத்திருக்கிறேன்: எஸ். எஸ். ராஜமௌலி

நடிகர் சூர்யா குறித்து எஸ். எஸ். ராஜமௌலி பேச்சு...

பகிர்:

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் சூர்யா குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.

ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹகத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் - அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்திற்கான தமிழ் புரமோஷன் நிகழ்வு நேற்று (செப். 27) சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி, நடிகர் சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, “இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த 'உலக நாயகன்' கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி. 'கருப்பு', 'விஸ்வநாத் ‌& சன்ஸ்' என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துகள். 'சிங்கம்' படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சி படுத்திய உங்களிடமிருந்து, 'சீன்' படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம். நவம்பரில் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.‌

ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார்; 'நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால் அதுதான் மிகச் சிறந்த கட்டடம்’. இது என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.

இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா? எனக் கேட்டேன். அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால்.... அது எனக்குப் பிடித்திருந்தால்... நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன்.‌ அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார்.

'ஒரு பேயைக் கடத்திய மனிதனின் கதை..’ என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விஷயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

 ஃபஹத் பாசில்  ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஜோஷி',  'ட்ரான்ஸ்', என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து எதிர்மறை நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு.

மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான். சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல், இசை இல்லாமல் பார்க்கும் போது நான் அழுதேன். சிரித்தேன். அந்த அளவிற்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

Director S.S. Rajamouli's remarks about actor Suriya have garnered attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments