FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாழ்க்கையில் ஒன்மோர் கேளுங்கள்.. மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை!

நடிகர் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்...

12 அக்டோபர் 2026, 1:14 pm IST
நிகழ்வில் நடிகர் சூர்யா பேசியபோது...
பகிர்:

நடிகர் சூர்யா ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை நிகழ்வில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, “இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. 47 வயது என்றால் வீட்டில் எப்படி ஒரு பிறந்த நாள் நடக்குமோ, அந்த போல் ஒவ்வொரு முறையும் இது குடும்ப நிகழ்ச்சியாக மட்டும்தான் பார்க்கிறோம். தொடர்ந்து, இந்த குடும்பம் இன்னும் விரிவடைந்துகொண்டேதான் இருக்கிறது. இங்கு வந்த, இன்று வந்திருக்கிற மாணவ - மாணவிகள் தங்களின் சாதனைகளைச் சொல்லி, ஒவ்வொரு முறையும் பரிசு வாங்கிப் போகும்போது, எவ்வளவு விஷயங்கள் தாண்டி வந்திருக்காங்க, எவ்வளவு விஷயங்கள் கடந்து வந்திருக்காங்க அப்படின்னு பிரம்மிப்பாகப் பார்க்கிறேன். அப்பாவோட வழிகாட்டுதல்தான் இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் இதை எடுத்துச் செல்ல முடிகிறது. இது ஒரு உணர்வு. இப்படித்தான் நாங்க வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

Advertisement

Advertisement

அகரம் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால் தொட முடிந்திருக்கிறது. இன்னும் பல விஷயங்கள் அகரம் மூலமாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. இன்னும் அது எடுத்துக்கொண்ட நோக்கம் குறையாமல் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது என்றால், கல்யாணி ஐயா மாதிரி முக்கியமானவர்கள் நம் கூடவே கை கோர்த்து நின்றுகொண்டு இருக்கிறார்கள். சமூகப் பார்வைனா என்ன? யாருக்காக பண்ண போறோம்? எதுக்காக பண்ண போறோம்? அப்படிங்கிற மறுபடியும் மறுபடியும் அவங்க வச்ச கேள்விகள், நம்ம கூட இருக்கிற வழிகாட்டிகளும் சரி, மாணவர்களும் சரி... இப்ப அகரமை முன்னெடுத்துட்டு போற முன்னாள் மாணவர்கள் அத்தனை பேருக்கும் அந்த பார்வையைச் சரியா பார்த்துக்கிட்டது இவர்களை மாதிரி நிறைய வழிகாட்டிகள்தான். அதனாலயே எங்க ஆரம்பிச்சமோ, அங்க மட்டுமே அதை மட்டுமே செய்துவிடாமல், இன்னும் யார் யாருக்குத் தேவை? இன்னும் யார் யார் தேவைப்படும் குழந்தைகள்? இன்னும் யாரை எல்லாம் கை பிடிச்சு கூட்டிட்டு வரணும் அப்படின்னு தேடும்போது, இஸ்லாமிய சமூகத்திலும் சரி, நிறைய மாணவிகள் கல்வி இடைநிற்றலில் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அங்கேயும் மலை கிராமங்களிலும் வேலைகள் பண்ண முடிந்தது. கடலோர பகுதிகளில் வேலைகள் செய்தோம். அதுமாதிரி தேவைகள் இன்னும் ஏராளமா இருக்கிறது. 

சினிமாவிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயத்தை உங்களுக்குச் சொல்லணும் பார்க்கிறேன். சினிமால 'ரீடேக்ஸ்' (Retakes) அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காட்சி ஒரே ஷாட்ல முடியறது கிடையாது. சில டைம் அஞ்சு டேக், ஆறு டேக் ஆகும். ஷாட் நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காக 18, 30 வாட்டி கூட 'ரீடேக்ஸ்' போவோம். ஒவ்வொரு முறையும் அது தவறாகும்போது இயக்குநர் "நீ ஃபெயில்" அப்படின்னு சொல்ல மாட்டாரு. "ஒன் மோர்" அப்படிம்பாரு. நான் இயக்குநரை வாழ்க்கையாகப் பார்க்கிறேன். வாழ்க்கை எப்பவுமே உங்களை ஃபெயில்னு சொல்றது கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்கலாம், ஆனா வாழ்க்கை அப்படி கிடையாது. நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட "இன்னொரு தடவைப் பண்ண போறேன், ஒன் மோர்"னு சொல்லுங்க. "இன்னொரு தடவைப் பண்ண முடியும்"னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம், இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம், இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம். உங்களுக்கு திருப்தியா இல்லாட்டி அதுவே கடைசி கிடையாது. அதுவே முடிவும் கிடையாது. நீங்க சொல்ல வேண்டிய ஒரே விஷயம் "ஒன் மோர்". இன்னொரு வாட்டி அதை சரி பண்ண முடியும், இன்னொரு வாட்டி இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும், அதை இன்னும் மேம்படுத்த முடியும். So, there is always "one more" அப்படிங்கறதை ஞாபகம் வச்சுக்கோங்க. எதுவுமே முடிவு கிடையாது அப்படிங்கிறதை தயவுசெஞ்சு மறந்துடாதீங்கன்னு சொல்லுவேன். 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Actor Suriya participated in an event organized by the Sri Sivakumar Educational Trust and delivered a speech.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments