FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆத்தி இவ யார்ரா..! சூர்யாவின் சீன் பட முதல் பாடல்!

நடிகர் சூர்யாவின் “சீன்” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது...

8 அக்டோபர் 2026, 7:38 pm IST
சூர்யாவின் “சீன்” படத்தின் முதல் பாடல்...
பகிர்:

நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கும் “சீன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ”சீன்”. இப்படத்தை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

புதுமையான தோற்றத்தில் சூர்யா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர்கள் நஸ்லன், நசீரியா நஜிம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகும் “சீன்” படத்தின் “ஆத்தி இவ யார்ரா” எனும் முதல் பாடலை இன்று (அக்.8) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன் எழுதிப் பாடியுள்ளார்.

வரும் நவம்பர் 6 ஆம் தேதி “சீன்” திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

The first song from the movie "Scene," starring actor Suriya, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments