ஆச்சரியப்படுத்தும் சீன் திரைப்பட வசூல்!
சூர்யாவின் சீன் திரைப்பட வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது...
நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படமும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் - 2 ஆகியவை தீபாவளி வெளியீடாக கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின.
இதில், சூர்யாவின் சீன் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மூக்குத்தி அம்மன் - 2 திருப்தியளிக்கவில்லை என கருத்துகள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சீன் திரைப்படம் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ. 145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவாக இந்த வசூலை ஈட்டியுள்ளதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து சீனும் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ரிக் வெற்றியால் சூர்யாவும் மகிழ்ச்சியில் உள்ளார்!