சீன் படத்தில் சூர்யாவுக்குப் பார்வைக் குறைபாடு? வசனகர்த்தா டிராவிட் விளக்கம்!
ஜித்து மாதவனின் சீன் படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து...
ஜித்து மாதவனின் சீன் படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் கண் பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அதில் பணியாற்றிய வசனகர்த்தா டிராவிட் செல்வம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நாயகனாக ’சீன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
புதுமையான தோற்றத்தில் சூர்யா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர்கள் நஸ்லன், நசீரியா நஜிம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
வரும் நவம்பர் 6 ஆம் தேதி “சீன்” திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் பெரும் கவனம் பெற்றது.
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலமாக கவனம் பெற்ற டிராவிட் செல்வம் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் பங்கேற்ற சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
சூர்யாவுக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு “இல்லை” என டிராவிட் செல்வம் மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும், வதந்திகளை நம்பாமல் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருங்கள் எனவும் கூறினார்.
ஜித்து மாதவனின் ரோமஞ்சம், ஆவேஷம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. சீன் அவரது மூன்றாவது படம். இதில் நஸ்லென் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். வில்லனாக நடித்துள்ளதாகப் பலரும் கூறுகையில் படக்குழு இதுவரை அதனை உறுதிசெய்யவில்லை. இதில் மேலும் ஆனந்தராஜ், லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
Suriya 47 as Scene film writer Dravid Selvam says Suriya is NOT blind in Jithu Madhavan's film
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.