FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிரடியாக விற்றுத் தீரும் சீன் டிக்கெட்கள்!

சீன் டிக்கெட் விற்பனை குறித்து...

நடிகர் சூர்யா
பகிர்:

நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் டிக்கெட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதனால், இந்த அறிவிப்பின்படி நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு தளங்களில் நேற்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான விற்பனையில் அதிரடியாக டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யாவின் வேகமான டிக்கெட் விற்பனை என்றும் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

சீன் நன்றாக இருந்தால் வணிக ரீதியாக ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்பதால் சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Tickets for actor Suriya's film scene are selling in large numbers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.