FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் காலை 6 மணிக்கு வெளியாகும் சீன்!

சீன் காலை முதல் காட்சி அறிவிப்பு...

நடிகர் சூர்யா
பகிர்:

நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால், இன்னும் டிக்கெட் முன்பதிவுக்கான இணையத் தளங்களில் சீன் திரைப்படத்திற்கான விற்பனை ஆரம்பமாகவில்லை. காரணம், தமிழக அரசு மீண்டும் அதிகாலை 6 மணிக் காட்சிகளை நடத்தத் திட்டமிட்டு வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், இந்த அறிவிப்பின்படி நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

It has been announced that the first show of actor Suriya's film Scene will be screened at 6:00 AM on its opening day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments