சூர்யாவின் சீன்! புதிய போஸ்டர் வெளியீடு!
சூர்யா நடிக்கும் சீன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிக்கும் சீன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். மலையாளத்தில் ஆவேசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்குகிறார்.
சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரிய கவனம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து வெளியான ‘ஆத்தி இவ யார்ரா’ என்கிற முதல் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர். சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Suriya's scene! New poster released!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.