சூர்யாவின் சீன் பட வசூல்: 10 நாள்களில் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் வெளியான சீன் படத்தின் வசூல் குறித்து...
சூர்யா நடிப்பில் வெளியான சீன் படம் உலகளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் திங்கள்கிழமை (நவ. 16) அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் சீன் திரைப்படம் வெளியானது.
Advertisement
Advertisement
கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான சீன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாக வெற்றிப் படமானது.
இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், படம் வெளியான 10 நாள்களில் உலகளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.