சூர்யாவின் சீன்: இரு நாள்களின் வசூல் எவ்வளவு?
சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் இரு நாள்களில் குவித்த வசூல் விவரங்கள் தொடர்பாக...
சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் இரு நாள்களில் குவித்த வசூல் விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். இதில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
இதனால், பல திரையரங்குகளில் இப்படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 34 கோடி வசூலித்ததாகக் கூறப்படும் நிலையில், இரு நாள்களில் ரூ. 81 கோடி வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து படம் மேலும் அதிக வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரு படங்களும் பெரியளவில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சீன் திரைப்படமும் சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்துள்ளது.