FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேரா பாய்... ஆர்ஜே பாலாஜிக்கு நடிகர் சூர்யா பதில்!

நடிகர் சூர்யாவின் பதிவு கவனம் பெற்றுள்ளது...

22 வினாடிகள் முன்பு
நடிகர் சூர்யாவுடன் ஆர்ஜே பாலாஜி.
பகிர்:

நடிகர் சூர்யா இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்குப் பதிலளித்த பதிவு கவனம் பெற்று வருகிறது.

சூர்யாவின் சீன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ. 145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவாக இந்த வசூலை ஈட்டியுள்ளதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

இப்படம் வெளியான போது நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி, “அன்புள்ள சூர்யா சார், இந்த ஆண்டு நமக்கு பல வழிகளிலும் சிறப்பாக அமைந்துள்ளது. அந்த அற்புதமான பட்டியலில் சீன் திரைப்படமும் இணைந்துள்ளது. பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துகள். இந்த தீபாவளி செம சீன் ஆக இருக்கப்போகிறது!” எனப் பதிவிட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று நடிகர் சூர்யா இப்பதிவைப் பகிர்ந்து, ”மேரா பாய், உங்கள் அன்பிற்கு நன்றி..” எனப் பதிலளித்துள்ளார். இப்பதிவு ரசிகர்களிடம் அதிக அளவில் கவனம் பெற்று வருகிறது.

A post by actor Suriya, in response to director RJ Balaji, is gaining attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.