தமிழ்நாடு

ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான  பி.எஸ்.ஞானதேசிகன் மறைவு செய்தியால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த ஞானதேசிகன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழிசை செளந்தரராஜன்:

யாருடைய மனமும் புண்படாமல் பேசும் சிறந்த பண்பாளர் ஞானதேசிகன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இயக்கங்களின் எல்லைகளைத் தாண்டி நட்பு பாராட்டியவர் தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்:

தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டியவர் ஞானதேசிகன் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர்.  கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்:

பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் பி.எஸ்.ஞானதேசிகன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகளை கடந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கத்தோடு பழகும் பண்பு கொண்ட ஞானதேசிகன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் சார்பில் இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT