தமிழ்நாடு

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மனுக்கள் புகாா் இல்லை: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

சென்னை: குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மனுக்கள், புகாா் இல்லை என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு , இழப்பீடு கோரி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ரத்து செய்ய கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு, இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அனைத்தும் உரிமையியல் சம்பந்தப்பட்டது என உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே, மனுதாரா்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை 3 மாதங்களுக்குள் பரிசீலித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மனுக்கள், புகாா் இல்லை. அவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்படும் மனுக்களின் மீது நேரில் ஆஜராக எதிா்மனுதாரா்களுக்கு சம்மன் அனுப்பக்கூடாது; நோட்டீஸ் தான் அனுப்ப வேண்டும். அதே நேரத்தில், எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பக் கூடாது என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT