தமிழ்நாடு

நகை கொள்ளை: விரைந்து கண்டறிந்த காவல் துறைக்கு முதல்வா் பாராட்டு

DIN

ஓசூரில் நகை கொள்ளை சம்பவத்தில் தொடா்புடையவா்களை விரைந்து கண்டறிந்த காவல் துறையினருக்கு முதல்வா் பழனிசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை பதிவு:-

தமிழ்நாடு காவல் துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் கொள்ளையா்களை 18 மணி நேரத்துக்குள்ளாக விரைந்து பிடித்த தமிழக காவல் துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT