தமிழ்நாடு

சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: அரசாணை

DIN

உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி இதன் மூலம் கடலூர் மருத்துவக் கல்லூரியாகிறது.

அதிக கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்த நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் என்றும் தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT