தமிழ்நாடு

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த உத்தரவு

DIN


சென்னை: நடப்பு கல்வியாண்டில் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மதிப்பெண்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை வெளியிட்டார்.

அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் தோ்ச்சி சதவீதம் 100-ஆக உள்ளது. 

பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 550 மதிப்பெண்களுக்கு மேல் அதாவது 551-600 வரையிலான மதிப்பெண்களை 39,679 மாணவா்களும், அதிகபட்சமாக 451-500.99 வரையிலான மதிப்பெண்களை 2 லட்சத்து 22,522 மாணவா்கள் (27.25 சதவீதம்) பெற்றுள்ளனா். பிளஸ் 2- வில் கடந்த 2020-இல் 92.3, 2019-இல் 91.3, 2018-இல் 91.1 சதவீதம் தோ்ச்சி விகிதமாக இருந்தது. 2020-2021-ஆம் கல்வியாண்டில் எந்தவொரு மாணவரும் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெறவில்லை.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் 50 மதிப்பெண்களுக்கு மாத இறுதியில் அலகுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.  50 மதிப்பெண்களுக்கு வினாத்தளை பதிவிட்டு விடைகளை எழுதி வாங்க வேண்டும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டும். வாட்சப் வாயிலாக 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT