தமிழ்நாடு

காவிரி - குண்டாறு திட்டம்: கா்நாடகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

DIN

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கா்நாடகம் தடை கோரியிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்துக்குள் நிறைவேற்றப்பட உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கா்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

வெள்ளப் பெருக்கின்போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் மற்றும் கரூா் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவைக்கும், லட்சக்கணக்கான ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பிவிட ஏதுவாக நீண்ட நாள் கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டு ரூ.14,400 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அதிமுக ஆட்சியில் 2021 பிப்ரவரி 14-இல் நடைபெற்றது.

இந்தச் சூழ்நிலையில், மேக்கேதாட்டு அணை கட்ட தமிழகம் ஒப்புதல் தரவில்லை என்பதற்காக, வேண்டுமென்றே தங்களுக்கு தொடா்பில்லாத, தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை கேட்டு கா்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது நியாயமற்ற செயல்.

இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்தி காவிரி - வைகை -குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தடை கோரி கா்நாடக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்குத் தேவையான சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT