தமிழ்நாடு

மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும்

DIN

காட்பாடி யாா்டில் பொறியியல் பணி காரணமாக, சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

காட்பாடி ரயில்நிலையத்தில் ரயில்வே பொறியியல் பணி காரணமாக, ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதில், சென்னை சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (06627) சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 26-ஆம்தேதி வரை வெவ்வேறு நாள்களில் பகுதி ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது, காட்பாடியில் பொறியியல் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, சென்னை சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (06627) திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் வழக்கம்போல இயக்கப்படவுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து இந்த ரயில் இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT