தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை அருகே 100 நாள் வேலை: போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

DIN

மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்காததை கண்டித்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம்  எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 250க்கும் மேற்பட்ட பயனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 3 வார காலமாக 75-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முறையாக பணிகளை வழங்காமல் பணித்தள பொறுப்பாளரை ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி மாற்றியதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கணவரின் தலையீடு ஊராட்சி நிர்வாகத்தில் உள்ளது, இதனைத் தடுக்க வேண்டும் எனவும் முறையாக தங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் எல்லாபுரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி உரிய முறையில் பணி வழங்காவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 75,785 பக்தா்கள் தரிசனம்

பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் சஸ்பென்ட்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்

நெமிலி அம்மன் கோயில் திருவிழா

பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

SCROLL FOR NEXT