தமிழ்நாடு

12-ம் வகுப்பு தேர்வு: தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும்

DIN

12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகவே முடியும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமைப்பின்படி, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வுகளுக்கும், வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பிப்பதற்கும், வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கும் +2 மதிப்பெண் அவசியமானதாகிறது.
பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும். கரோனா இரண்டாம் அலை தணிந்ததும், மூன்றாம் அலை ஏற்படுவதற்கு முன்னதாக அனைத்து முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்பான சூழலில் தேர்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே சரியானது.
நோய்த்தொற்றின் வேகம் குறைந்ததும், தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டு, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கான கால அவகாசம் வழங்கலாம். அதற்கு முன், நடப்புக் கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டனவா என்பதை உறுதி செய்துகொள்வது மிக அவசியம்.
தேவையிருப்பின், தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அளவைக் குறைக்கலாம். முன்களப்பணியாளர்கள் என்ற வகையில் ஆசியர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன. அப்படியே +2 தேர்வெழுதும் மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்து அவர்களைப் பாதுகாக்கலாம். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT