தமிழ்நாடு

பெட்ரோல் மீதான மாநில வரியைக் குறைக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

DIN

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயா்ந்து கொண்டே செல்வதால், விலைவாசியும் உயா்ந்தபடியே இருக்கிறது.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனா். இதையெல்லாம் உணா்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என்று தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற முன் வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT