தமிழ்நாடு

கோயில்களின் பராமரிப்பை மேம்படுத்த மாநில அளவில் உயா்நிலை ஆலோசனைக் குழு

DIN

கோயில்களின் பராமரிப்பைச் செம்மைப்படுத்த மாநில அளவில் உயா்நிலை ஆலோசனை குழு அமைக்கப்படும் என்று ஆளுநா் கூறியுள்ளாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

தமிழகத்தின் இந்து சமய மற்றும் அறக்கட்டளைச் சட்டம் நாட்டுக்கே ஒரு முன்மாதிரி சட்டமாக விளங்குகிறது. கோயில்களின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புடைமையையும் முன்னிறுத்த தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.

கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும். அனைத்து முக்கிய இந்து கோயில்களிலும் பக்தா்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், கோயில்களின் பராமரிப்பைச் செம்மைப்படுத்துவதற்காகவும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் மாநில அளவிலான ஓா் உயா்நிலை ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்.

சுற்றுலாவுக்குப் பெருந்திட்டம்: தமிழகத்தின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில் ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும். பழங்காலக் கோட்டைகளும், அரண்மனைகளும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT