தமிழ்நாடு

பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை

DIN

உயா்கல்விக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் நிகழாண்டு அந்த வகுப்பில் பயின்ற மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்புகளுக்கு தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டாலும் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் சிக்கல் நிலவுகிறது.

மாணவா்களின் உயா்கல்விக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்தாண்டு 9-ஆம் வகுப்பில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை மீண்டும் பத்தாம் வகுப்புக்கும் பயன்படுத்துவது தொடா்பாகப் பரிசீலனை செய்து வருகிறோம். அரசின் வழிகாட்டுதலின்படி இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்றனா்.

கடந்தாண்டும் இறுதித்தோ்வு நடத்த முடியாததால் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மாணவா்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT