தமிழ்நாடு

கரோனா அச்சுறுத்தலால் வெறிச்சோடிய சத்தியமங்கலம் வாரச்சந்தை  

DIN

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 2வது அலை தொற்று பரவாமல் தடுப்பதற்கு தமிழகத்தில் 10ம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அரசு, பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. அனைத்துப் பகுதியில் மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையே பொதுமுடக்கத்துக்கு பின் சத்தியமங்கலம் வாரச்சந்தை வழக்கம்போல செயல்பட்டது. பல்வேறு ஊர்களிலிருந்து சிறு வியாபாரிகள் வந்தனர். 

காய்கறிகள், பழங்கள் மற்றும் கார வகைகள், தின்பண்டங்கள், பலசரக்கு கடைகள் என அனைத்து கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தைக்கு பொருள்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. காய்கறி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தக்காளி பீட்ரூட் உள்ள அனைத்து காய்கறி வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டது. 

வாரந்தோறும் முப்பது பெட்டிகள் தக்காளி விற்கும் நிலையில் இன்று 2 மட்டுமே தக்காளி பெட்டி மட்டும் விற்கப்பட்டதால் மீதமுள்ள பெட்டிகள் தேங்கிகிடந்தன. தக்காளி அழுகும் பொருள்கள் என்பதால் பிற இடங்களுக்குத் திருப்பி எடுத்துப்போகும் நிலை ஏற்பட்டதாக தக்காளி வியாபாரிகள் தெரிவித்தனர். 

கீர வகைகள், புடலைக்காய், தக்காளி போன்ற விவசாயப்பொருள்கள் காய்கறி வேனிலிருந்து இறக்காமல் அப்படியே எடுத்துச் செல்லப்பட்டன. மதியம் 12 மணிக்கு பிறகும் வாரச்சந்தைச் செயல்பட்ட நிலையில் பொதுமக்கள் வராத காரணத்தால் அடுத்த வாரம் வாரச்சந்தை செயல்படுவது கேள்விக்குறியாகும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தியமங்கலம் வந்த ராஜீவ் காந்தி ஜோதிக்கு வரவேற்பு

வெள்ளோடு விவேகானந்தா பள்ளி 100 % தோ்ச்சி

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் கருத்தரங்கம்

கடம்பூா் அருகே வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் காயம்

தேன் பண்ணையில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

SCROLL FOR NEXT