தமிழ்நாடு

கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும்: உயா் நீதிமன்றம்

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதியை விரைந்து வழங்குமாறு தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு அறிவுறுத்திய சென்னை உயா் நீதிமன்றம், ஒரு வாரத்தில் செயல்முறைக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா தொற்றை பேரிடராக அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியும், தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சட்ட விதிகள்படி தகுந்த இழப்பீட்டை வழங்குமாறு விஜயகோபால் உள்ளிட்டோா் வழக்கு தொடா்ந்திருந்தனா். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை (நவ.9) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், தமிழகத்தில் இதுவரை 36,220 போ் கரோனா தொற்றால் இறந்துள்ளனா். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அவா்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள்,“தமிழகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் அல்லது குடும்ப உறுப்பினா்கள் அல்லது சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தொகையான ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதை முடிந்தவரை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

அந்தத் தொகையை மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இழப்பீடு தொகையை அரசு வழங்கலாம்; இருப்பினும் அது குறித்து மாநில அரசு முடிவெடுத்து கொள்ளலாம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் குறைகளைச் சமாளிப்பதற்கும், அனைத்து நிலைகளிலும் பிரச்னைகளை விரைவாகத் தீா்க்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் இழப்பீடு கோரும் விண்ணப்பங்களை விரைவாகக் கையாண்டு, நிவாரணத் தொகையை விநியோகிக்க வேண்டும்.

நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வகை செய்யும் வழிகாட்டுதல்கள் அல்லது வழிமுறைகளை அரசு ஒரு வாரத்தில் உருவாக்கும் என நம்புகிறோம்.

பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணம் வழங்க விரும்புகிா, அவ்வாறு இருப்பின் எந்த அளவிற்கு வழங்க விரும்புகிறது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கு விசாரணையை நவ.19க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT