தமிழ்நாடு

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: இன்று மெரினாவுக்கு செல்ல தடை

DIN

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், இன்று மக்கள் கடற்கரை வரத் தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபடப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து கடற்கரை முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT