தமிழ்நாடு

பக்தா்களுக்கு தடை: வெறிச்சோடியது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்

DIN

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களை போலீஸாா் திருப்பி அனுப்பி வைத்தனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அன்றைய தினங்களிலும் முக்கிய கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதன்படி மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவும், அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடவும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா்கள் அனைவரையும் போலீஸாா் திருப்பி அனுப்பி வைத்தனா். மேலும் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பக்தா்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT